(4.12.2025 முதல் 10.12.2025 வரை)
சாதகங்கள்: வெற்றி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் செவ்வாய் அமர்ந்திருப்பதால் சில முக்கியமான முடிவுகளை எடுக்கும் வாய்ப்பு ஏற்படும். பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்ளும் திறன் ஏற்படும். முன் வைத்த காலை பின் வைக்காமல் காரியங்களை ஆற்றுவீர்கள். ராசிக்கு இரண்டாம் இடத்தில் அமர்ந்த ராசிநாதனை குரு பார்ப்பதாலும் புதன் அமர்ந்திருப்பதாலும் புது ஆதித்ய யோகம் இருப்பதாலும் எடுத்த காரியங்கள் தொய்வின்றி நடைபெறும். பொருளாதார ஏற்றம் உண்டு. தடைகள் ஏற்பட்டாலும் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டு. சிலர் துணைத் தொழில்களைத் தொடங்கும் வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.
கவனம் தேவை: கணவன் மனைவி உறவுகளில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். சொத்து சம்பந்தமான பிரச்னைகள் நீடிக்கும். உயர் அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களை அனுசரிக்க விட்டால் அவர்களால் பிரச்னை உண்டு. இரண்டாம் இடத்தில் சூரியன் அமர்ந்திருப்பதால் பேச்சில்
கடுமையை குறைத்துக் கொள்ளவும். வழக்குகள் இழுத்தடிக்கும்.
சந்திராஷ்டமம்: 3.12.2025 இரவு 11.14 முதல் 5.12.2025 இரவு 10.15 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: வாரந்தோறும் சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வணங்கவும். வல்லமை கிடைக்கும்.


