(4.12.2025 முதல் 10.12.2025 வரை)
சாதகங்கள்: ராசிக்கு இரண்டில் ராசிநாதன் தன குடும்பத்தில் பலமாக அமைந்திருப்பதால் குடும்ப உறவுகள் சிறப்பாக இருக்கும். குரு ராசியைப் பார்வை செய்வதால் காரிய வெற்றி உண்டாகும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சி பலிக்கும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இட மாற்றம் கிடைக்கும். சிலருக்கு ஊதிய உயர்வு உண்டு. தொழிலில் எதிர் பார்த்த லாபம் உண்டு. வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புதிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும்.
கவனம் தேவை: ராசியில் சூரியன் இருப்பதாலும் நான்காம் இடத்தில் சனியும் ராகுவும் இணைந்து இருப்பதாலும் ஆரோக்கிய விஷயத்தில் மிகுந்த கவனம் தேவை. தேவையில்லாமல் பயணங்களை மேற்கொள்வது, உணவு வேளா வேளைக்கு உண்ணாமல் தவிர்ப்பது, வெளியிடங்களில் உண்பது முதலிய பழக்கங்களால் ஆரோக்கியம் கெடும். புதிய பதவிகள் கிடைத்தாலும் கூடுதல் பணி சிரமப்படுத்தும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களோடு பகை உருவாகலாம். வார்த்தைகளில் கவனம் தேவை.
சந்திராஷ்டமம்: 5.12.2025 இரவு 10.16 முதல் 7.12.2025 இரவு 10.38 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: மாலை நேரத்தில் அகல்விளக்கு ஒன்று ஏற்றி வழிபட்டு வாருங்கள். ஏற்கனவே பூஜை அறையில் விளக்கு இருந்தாலும் இது கூடுதல் விளக்காக இருக்க வேண்டும்.


