(4.12.2025 முதல் 10.12.2025 வரை)
சாதகங்கள்: தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்த சனி வக்ரம் நீங்கி இருப்பதால் தொழிலில் தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். ஊழியர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். மூன்றாம் இடத்தில் இருந்தாலும் குரு வக்ரம் பெறுவதால் எதிர்பாராதபடி சில நல்ல காரியங்கள் நடக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இம்மாதத்தில் உங்களின் திட்டங்கள் நிறைவேறும். நிதி நிலைமை மிதமானதாக இருக்கும். தன பஞ்சமாதிபதி புதன் ஏழாம் இடத்தில் அமர்ந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகின்றார். உங்கள் ராசியையும் பார்ப்பதால் ராசிபலம் பெறுகிறது. மண் பூமி வாங்கும் யோகம் உண்டு. பயணங்களால் ஆதாயம் உண்டு.
கவனம் தேவை: ராசிக்கு மூன்றாம் இடத்தில் குரு அமர்ந்திருப்பது இட மாற்றம், வேலை மாற்றம் முதலியவற்றைத் தருவது. விரும்பாத சில பயணங்களையும் கொடுக்கும். நான்காம் இடத்தில் அமர்ந்த கேது குடும்பத்தில் நிம்மதிக் குறைவை ஏற்படுத்தலாம். கணவன் மனைவி உறவுகளில் கருத்து வேறுபாடுகள் வரலாம். மனைவிக்கு ஆரோக்கிய பிரச்னைகளையும் தரலாம். கவனம் தேவை.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை துர்க்கையை விளக்கு போட்டு வணங்குங்கள். வெற்றி கிடைக்கும்.


