search-icon-img
featured-img

கன்னி

Published :

(21.8.2025 முதல் 27.8.2025 வரை)

சாதகங்கள்: பொருளாதாரச் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. காரணம் குருவின் பார்வை உங்கள் தன குடும்ப ராசியில் படிகிறது. ஆறாம் இடத்திலும் அவர் பார்வை இருப்பதால் கொடுக்க வேண்டிய கடன்களைக் கொடுத்து விடுவீர்கள். வரவேண்டிய கடன்களும் வசூலாகிவிடும். ஆறில் சனி ராகு இணைந்து உங்கள் எண்ணங்களைத் தூக்கி நிறுத்துவார்கள். நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ஆற்றலைத் தருவார்கள். லாபஸ்தானத்தில் சுக்கிரன் புதன் இணைந்து உங்களுக்கு வெற்றியைத் தருவார்கள். புதிய பொருட்களையும் ஆடைகளையும் வாங்குவீர்கள். வண்டிகளை மாற்ற வேண்டிய மகிழ்ச்சியான தருணம் இது. அதற்கான முயற்சிகள் வெற்றி பெறும். சிலர் புதிய வண்டிகளை வாங்குவீர்கள். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்து பொருளாதார நிலை மேம்படும்.

கவனம் தேவை: பொருளாதாரத்தில் ஏற்றம் இருந்தாலும் அதற்கேற்ற செலவுகளுக்கான கிரக நிலைகளும் இருக்கிறது. திடீர் பிரச்னைகள் ஏற்படலாம். சிலர் பணியில் இருந்து விலக நேரலாம். வேறு பணி கிடைக்கும் என்றாலும் அதுவரை மனச் சங்கடத்தை அனுபவிக்கும்படி நேரலாம். தேவையற்ற பிரயாணங்கள், அலைச்சல்கள் உண்டு. கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் குறையும் என்றாலும் ராசியில் உள்ள செவ்வாய் தேவையற்ற வார்த்தைகளை வீசச் செய்யும் என்பதையும் கவனத்தில் கொண்டு பேசும் பொழுது வார்த்தை மாறிப் போய்விடாமல் பார்த்துக் கொள்ளவும்.

பரிகாரம்: பசு மாட்டுக்கு வாழைப்பழமோ கீரையோ வழங்குங்கள். பெருமாளையும் தாயாரையும் வணங்குங்கள்.