(4.9.2025 முதல் 10.9.2025 வரை)
சாதகங்கள்: பாக்கிய ஸ்தானமும் லாபஸ்தானமும் வலுவாக உள்ளன. குருவின் பார்வையினால் சிறப்பு அடைகின்றன. எனவே பிரச்னைகளை முறையாகக் கையாள வேண்டும். ஏழில் புதன் சூரியனோடு இணைந்து ராசியைப் பார்ப்பதால், சிந்தனையோடு ஒரு காரியத்தை அணுகும் ஆற்றல் கிடைக்கும். உங்களோடு தொடர்புடைய ஒருவர் உங்களுக்கு உதவி தந்து, உற்சாகப்படுத்துவார். தசா புத்திகள் சாதகமாக இருந்தால் ஊதிய உயர்வு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உண்டு. மேலதிகாரிகள் மறைமுகமாக உதவுவார்கள். பெரியோர்களின் ஆசிகளும் தெய்வத்தின் ஆசியும் துணையாக நின்று சிக்கல்களில் இருந்து விடுவிக்கும்.
கவனம் தேவை: ராசியில் சனி ராகு இணைந்து இருப்பதால், செயலுக்கும் சிந்தனைக்கும் இடைவெளி இருக்கும். சோம்பலும் அலட்சியமும் தாமதமும் பல பிரச்னைகளுக்குக் காரணமாகும். எதிர்மறை சிந்தனைகள் வேண்டாம். அதிக அலைச்சலும் எரிச்சலும் காரியத் தடைகளைத் தரும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் உண்டு. கணவன் மனைவி உறவுகள் சற்று கடினமாகவே இருக்கும் என்பதால் விட்டுத்தர வேண்டும்.
பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வணங்கவும்.