(30.10.2025 முதல் 5.11.2025 வரை)
சாதகங்கள்: பத்தாம் இடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதும், பாக்கியஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெறுவதும் சிறப்பான பலன்களைத் தரும். 6ல் குரு இருந்தாலும், அவர் இரண்டாம் இடத்திற்கு ஐந்தாம் இடமாகிய கடகத்தில் உச்சம் பெற்றிருப்பதால் வருமானத்தை அதிகரித்துத் தருவார். செலவுகளும் கூடுதலாக இருக்கும். செவ்வாய் குரு இணைந்து யோகம் பெறுவதால் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும். 9ல் சுக்கிரன் இருப்பதால், கலைத்துறையினருக்கு ஆதாயமான ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
கவனம் தேவை: ஏழரைச் சனியின் ஆதிக்கமும், ராகு ராசியில் இருப்பதும் எதிலும் சற்று கவனமாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது. எதிலும் அகலக் கால் வைக்க வேண்டாம். மனக்குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம். குரு 6ல் இருப்பதால், ஆரோக்கிய பிரச்னையில் கவனம் தேவை. குறிப்பாக, இதய நோய் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்னை உள்ளவர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
பரிகாரம்: சனிக்கிழமை தவறாமல் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் செல்லுங்கள். சனி பகவானை வணங்குங்கள். சங்கடங்கள் தீரும்.