(25.9.2025 முதல் 1.10.2025 வரை)
சாதகங்கள்: இரண்டு சுபகிரகங்களின் (குரு, சுக்கிரன்) பார்வை ராசியில் விழுவதால் ராசியின் தோஷம் குறைகிறது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். 9ல் அமர்ந்த செவ்வாய் தைரிய ஸ்தானத்தைப் பார்வையிடுகிறார். துணிச்சலோடு காரியங்களைச் செய்வீர்கள் புனித யாத்திரை மேற்கொள்வீர்கள் கணவன் மனைவி உறவுகளில் சிக்கல்கள் குறையும் தொழில் விஸ்தரிப்புக்காக கடன் பெறும் வாய்ப்புண்டு. நண்பர்கள் உறவுகள் உதவுவார்கள். மாணவர்கள் நன்கு படித்து மதிப்பெண்கள் பெறுவார்கள். குழந்தைகளால் சந்தோஷம் உண்டு. சிலருக்கு கூடுதல் வருமானத்திற்கான வழி பிறக்கும்.
கவனம் தேவை: பிரயாணங்களில் எச்சரிக்கை தேவை வாகனங்கள் பழுது பட்டு செலவு வைக்கும் புதன் எட்டில் பலம் பெற்றதால் காரியங்கள் தடைபடும். திட்டமிட்டபடி முடிக்க முடியாமல் திணறுவீர்கள். யோசித்துச் செயல்படவும் அஷ்டமத்தில் சூரியன் இருப்பதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். அரசாங்க விரோதம் வேண்டாம். மனக்குழப்பத்திற்கு இடம் தர வேண்டாம்.
பரிகாரம்: ராகு ராசியில் இருப்பதால் வெள்ளிக்கிழமை அவசியம் பக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று அம்பாளை வழிபடவும்.