(30.10.2025 முதல் 5.11.2025 வரை)
சாதகங்கள்: ராசிக்கு 6ல் இதுவரை இருந்த சுக்கிரன் ராகுக்கு 7ல் ஆட்சி பெறுகிறார். இது அற்புதமான அமைப்பு. அவர் ராசியைப் பார்ப்பதால், கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் யோகம் உண்டு. கேந்திரத்தில் உச்சம் பெற்ற குரு அமர்ந்து கர்ம ஸ்தானத்தைப் பார்வையிடுவதும், லாபத்தானத்தில் ராகு இருப்பதும், தொழில் முன்னேற்றத்தைக் குறிக்கும் அமைப்பு. ராசி அதிபதியான செவ்வாயை குரு பார்ப்பதால், குரு மங்கள யோகம் ஏற்படுகிறது. இது அஷ்டமஸ்தானத்தில் ஏற்பட்டாலும், மறைமுக நன்மையே கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சூரியனும், புதனும் இணைந்து, யோக பலத்தோடு இருப்பதால், பொருளாதாரத்தில் நிறைவும், தைரியமும்,
தன்னம்பிக்கையும் எடுத்த காரியத்தில் வெற்றியும், உண்டு.
கவனம் தேவை: ராசிநாதன் அஷ்டமத்தில் இருப்பதால், உங்களுக்கு நீங்களே கஷ்டத்தை விலை கொடுத்து வாங்கும்படியான அமைப்பும் இருப்பதால், எந்த விஷயத்தையும் யோசித்துச் செய்யவும். வீண் பழிகள் ஏற்கும்படி நேரலாம்.
பரிகாரம்: சஷ்டி விரதமும் முருகப் பெருமான் வழிபாடும் சங்கடங்களைக் குறைக்கும்.


