(28.8.2025 முதல் 3.9.2025 வரை)
சாதகங்கள்: ராசிக்கு உரிய செவ்வாய் ஆறாம் இடத்தில் இருப்பது ஒரு விதத்தில் அதிர்ஷ்ட அமைப்பு. காரணம் இது விபரீத யோகமாகச் செயல்பட்டு எதிர்பாராத நல்ல விஷயங்களைப் பெற்றுத் தரும். தொழில் போட்டிகள் குறையும். ஐந்தாம் அதிபதி புதனோடு இணைந்து ஆட்சி பெற்றிருப்பதும் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தை குரு பார்ப்பதும் அற்புதமான நன்மைகளைத் தரும். சனி ராகு இணைவு லாபஸ்தானத்தில் இருப்பதால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுகஸ்தானத்தில் தனபாக்கிய சுக்கிரன் அமர்ந்திருப்பதால் சுகங்கள் அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் துறைகள் சிறப்பாக நடைபெறும். ஊதிய உயர்வு, பதவி உயர்வோடு கூடிய இடமாற்றம் கிடைக்கும். அமைப்பு உள்ளது.
கவனம்தேவை: ஐந்தில் கேது அமர்ந்திருக்கிறார் சிந்தனையில் தெளிவு தேவை. கூட புதன் இருப்பதால் புத்தி கலங்கி அவசரப்பட்டு தவறான முடிவுகள் எடுத்துவிடும் அபாயம் உண்டு. தவறான தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். பூர்வீக சொத்து விஷயத்தில் குழப்பங்களும் கருத்து வேறுபாடுகளும் வரலாம்.
சந்திராஷ்டமம்: 30.8.2025 காலை 7.53 முதல் 1.9.2025 இரவு 7.55 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அம்மன் கோயிலுக்கு தவறாமல் செல்லவும்.