(25.9.2025 முதல் 1.10.2025 வரை)
சாதகங்கள்: தனஸ்தானத்தில் சுக லாபாதிபதியான சுக்கிரன் இருப்பது நல்ல அமைப்பு. வருமானம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றமான நடவடிக்கைகளை எடுப்பீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தர வேண்டிய கடனில் ஒரு பகுதி அடைபடும். வாணிபத்தில் தேக்கநிலை மாறி லாபம் அதிகரிக்கத் தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் பாராட்டும் கிடைக்கும். தொழில் வணிகத்தில் (கடைகள்) புதியவிஸ்தரிப்பு முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். சுப காரியத் தடை நீங்கும். பக்தி அதிகரிக்கும். திருத்தல பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
கவனம் தேவை: வரவுக்கு வழி இருந்தாலும் செலவும் அதிகரிக்கும். எனவே, செலவில் கவனம் தேவை. இளைய சகோதரர்கள் கருத்து வேறுபாடு வரலாம். ஆரோக்கியத்தில் பிரச்னைகள் வரலாம். வீண் விவாதத்தைத் தவிர்க்க வேண்டும். அதனால் மன உளைச்சல் வரும். தந்தை மகன் உறவுகளில் கவனம் தேவை.
பரிகாரம்: சிவபெருமானை வணங்குங்கள். காலைநேரத்தில் அருகில் உள்ளகோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யுங்கள். பின் உங்கள் பணிகளை கவனியுங்கள். வெற்றி கிடைக்கும்.