(30.10.2025 முதல் 5.11.2025 வரை)
சாதகங்கள்: தொழிலுக்கு உரிய செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமைய, குரு பார்க்க இவ்வாரம் நற் பலன்கள் நடைபெறும். குருவும் செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகம் நன்மைகளைச் செய்யும். புதிய வாய்ப்புகளைத் தரும். பொருளாதாரத்தில் தன்னிறைவையும் முன்னேற்றத்தையும் தரும். பிறர் மதிக்கத்தக்க செயல்களைச் செய்வீர்கள். சொத்துக்கள் மற்றும் ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு. உச்சம் பெற்ற குரு ராசியில் இருந்தாலும், அவருடைய பார்வை முக்கியமான இடங்களில் படிவதால், அதிக நன்மைகள் ஏற்படும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் தீரும். குலதெய்வ தரிசனம் உண்டு. பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும்.
கவனம் தேவை: அஷ்டமத்தில் ராகுவும் 2ல் கேதுவும் இருப்பதால், பல நேரங்களில் திட்டமிட்ட காரியங்கள் செய்ய முடியாமல் தடைபடும். மாற்று வழிகளை யோசித்துக் கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டி இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். 10 ரூபாயில் முடிய வேண்டிய காரியம், 20 ரூபாய் செலவழித்தாலும் தாமதத்தோடு முடியும். பிறரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டாம்.
சந்திராஷ்டமம்: 31.10.2025 காலை 6.49 முதல் 2.11.2025 காலை 11.27 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: குலதெய்வ தரிசனத்தை விட வேண்டாம்.