(31.7.2025 முதல் 6.8.2025 வரை)
சாதகங்கள்: சுக லாபாதிபதி சுக்கிரன் ராசிக்கு 12ல் குருவோடு இணைந்து இருக்கிறார். மூன்றாம் இடத்தில் செவ்வாய் வீரிய ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பு. தைரியமும் உற்சாகமும் அதிகரிக்கும். சனி வக்ரகதியில் இருப்பதாலும் செவ்வாயின் பார்வை இல்லாமல் இருப்பதாலும் சென்ற வாரத்தில் இருந்த சில கஷ்டங்கள் படிப்படியாகக் குறையும். எதிர்பாராத நன்மையும் உண்டு. ராசியில் புதன் சூரியனோடு இணைந்து இருக்கிறார். சில அலைச்சல்களும் பிரயாணங்களும் உண்டு என்றாலும், அதில் ஆதாயம் உண்டு. கலைக் கிரகமான சுக்கிரன் சில எதிர்பாராத வாய்ப்புகளை வழங்கி பொருளாதார நிலையை உயர்த்துவார்.
கவனம் தேவை: ராசியில் சூரியன் புதன் இணைந்திருப்பதால், அலைச்சல்களும் அதனால் ஏற்படும் உடல் அசதி, சோர்வு, கண் எரிச்சல், தலைவலி முதலிய பிரச்னைகளால் அவதிப்படும் வாய்ப்புண்டு, உணவுகளில் ஒவ்வாமை ஏற்படும் வெளியில் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பிரச்னையைக் கையாளுங்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் அம்மன் கோயிலுக்குத் தவறாமல் செல்லுங்கள். அம்பாளின் அருள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும்.