(30.10.2025 முதல் 5.11.2025 வரை)
சாதகங்கள்: குரு ராசிக்கு 7ல் உச்சம் பெற்றிருப்பதும் ராசியைப் பார்ப்பதும் தன் சொந்த ஸ்தானமான தைரிய, லாபஸ்தானங்களைப் பார்வையிடுவதும் சிறப்பு. ராசிக்கு 2ல் உள்ள கிரகங்களின் தோஷம் கட்டுப்படும். தைரியம் அதிகரிக்கும். சுப விரயங்கள் உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு சிறப்பான பதவிகள் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் உதவியும் ஊக்கமும் கிடைக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து இதுவரை இருந்த சந்தேகங்கள் நிவர்த்தியாகும். புதிய வழி பிறக்கும். திருமண சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். லாபஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று இருப்பதால் வீடு கட்டும் யோகம் உண்டு. ரியல் எஸ்டேட் சிறப்பாக நடக்கும்.
கவனம் தேவை: சுகஸ்தானத்தில் ராகு இருப்பதால், வரவுக்கு மீறிய செலவு இருக்கத்தான் செய்யும். கவனமாக செலவு செய்வதன் மூலம் பணப்பிரச்சனையை கட்டுக்குள் கொண்டு வரலாம். குடும்பத்தில் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு. பரஸ்பரம் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் மாலையில் ஓர் கூடுதல் அகல் விளக்கு ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்யவும்.