(31.7.2025 முதல் 6.8.2025 வரை)
சாதகங்கள்: சுக லாபாதிபதி செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்தை பார்வை இடுவதன் மூலம் தைரியமும் செயல்களில் நேர்த்தியும் இருக்கும். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. குருபகவான் ஒன்பதாம் பார்வையாக உங்கள் தன குடும்பஸ்தானத்தை பார்வையிடுவதால், சனி ராகுவின் தீமை குறையும். வெளிநாட்டு வேலை பயணம் முதலிய விஷயங்கள் சாதகமாக இருக்கும்.
கவனம் தேவை: பொருளாதாரத்தில் சில பிரச்னைகள் ஏற்படலாம். வரவைவிட செலவு அதிகரிக்கலாம். கடன்கள் வாங்க நேரிடலாம். மேலதிகாரிகளிடம் எச்சரிக்கையோடு நடந்து கொள்ளுங்கள். ஆறாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால், ஏதாவது ஒரு கவலை உங்கள் மனதை அரித்துக் கொண்டே இருக்கும். தொழில் போட்டிகளால் மன அழுத்தம் ஏற்படலாம். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகம் இருக்கும். குடும்பப் பெண்களுக்கு மனபாரம் அதிகரிக்கும்.
பரிகாரம்: வயதானவர்களுக்கு உதவுங்கள். சனி ராகு தோஷம் நீங்க பூஜை அறையில் கூடுதல் விளக்கு ஒன்று ஏற்றி வாருங்கள்.