search-icon-img
featured-img

மிதுனம்

Published :

(25.9.2025 முதல் 1.10.2025 வரை)

சாதகங்கள்: வாரத்தின் மத்தியில் ராசிநாதன் புதன் பஞ்சம ஸ்தானத்திற்குச் செல்லுகின்றார். அது நல்ல அமைப்பு. கணவன் மனைவி பிரச்னைகள் அகலும். முயற்சிகள் பலனளிக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் புதிய திருப்பங்கள் கிடைக்கும். வாங்கிய இடம் நல்ல விலைக்குப் போகும். ரியல்எஸ்டேட் தொழிலில் வருமானம் அதிகரிக்கும். குருவும் செவ்வாயும் பார்ப்பதால் குரு மங்கள யோகம் செயல்படும் இதுவரை தாமதப்பட்டாலும் இனி காரியங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும். தொழில் வருமானம் அதிகரிக்கும்.

கவனம்தேவை: உத்தியோக அலைச்சல் உண்டு. உறவினர்கள் பிரச்னைத் தருவார்கள். தூக்கமின்மையால் அவதிப்படுவீர்கள். தாய் தந்தை ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நாலில் சூரியன் இருப்பதால் விரோதம் அதிகரிக்கும் யாருடனும் பகை வேண்டாம்.

சந்திராஷ்டமம்: 1.10.2025 பிற்பகல் 2.28 முதல் 3.10.2025 இரவு 9.27 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.

பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்யுங்கள். நன்மை கிடைக்கும்.