இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

மிதுனம்

Published: 21 Aug 2025

(21.8.2025 முதல் 27.8.2025 வரை)

சாதகங்கள்: மூன்றாம் இடத்து அதிபதி மூன்றாம் இடத்தில் ஆட்சி பெறுவது அற்புதமான அமைப்பு. அது உத்தியோக வீரிய ஸ்தானம் என்பதால், எண்ணங்கள் வலிமை பெற்று நினைத்த காரியம் நிறைவேறும். இரண்டில் சுக்கிரன் இருப்பது வலிமையான பொருளாதார அமைப்பைத் தரும். ராசிநாதன் புதன் இரண்டாம் இடத்தில் அமர்ந்து அளவற்ற நன்மைகளைச் செய்வார். குருவின் பார்வை ஐந்தாம் இடத்திலும், ஏழாம் இடத்திலும் விழுவதால் நண்பர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் கருத்து வேற்றுமை மறையும் அரசாங்க காரியங்கள் சாதகமாக அமையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்பு உண்டு. முக்கியமான பொருள்களை வாங்கும் யோகம் உண்டு. சிலர் வாகனங்களை மாற்றுவார்கள்.

கவனம் தேவை: பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள், பிரச்னைகள் வரலாம். சேமிப்புகளை கவனமாகக் கையாள வேண்டும். கன்னியில் செவ்வாய் இருப்பதால் ஆக்ரோஷமான எண்ணங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் தொழிலாளர்களிடம் கோபமாகப் பேசி பிரச்னைகள் வளர்த்துக் கொள்ளக் கூடாது. சகோதர உறவுகளிலும் சுமுகமாக இருக்க வேண்டும்.

பரிகாரம்: ஏழைக் குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் வாங்கித் தரவும். பெருமாளை வணங்கவும்.

பிறந்தநாள் பலன்கள்