(30.10.2025 முதல் 5.11.2025 வரை)
சாதகங்கள்: தன குடும்பஸ்தானத்தில் இருந்த சுக்கிரன், மூன்றாம் இடத்தில் ஆட்சி பெறுவதும், மூன்றாம் இடத்தில் சூரியன் அமர்ந்து யோகம் பெறுவதும் இந்த வாரத்தில் சிறப்பு. சுக்கிரனுடைய ஸ்தான பலம் பொருளாதார ரீதியான வளத்தைத் தரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. குருவும் செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகத்தைத் தருகிறார்கள். எனவே, சுபகாரியம் தடை இன்றி நடைபெறும். புகழ்பெற்ற ஆலயங்களுக்குச் சென்று வழிபட வாய்ப்பு உண்டு. சுப விரயங்கள் ஏற்படும். பழைய பொருட்களை அல்லது வாகனங்களை விற்றுவிட்டு புதியது வாங்கும் வாய்ப்புண்டு.
கவனம் தேவை: ஜன்ம ராசியில் கேது இருப்பதால், கெட்ட எண்ணங்கள் மனதுக்குள் மறைந்து கிடக்கும். அவற்றை வளரவிட வேண்டாம். சனி வக்கிரத்தில் இருப்பதால் கணவன் மனைவி உறவுகளில் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வாதப்பிரதிவாதங்களை வளர்க்க வேண்டாம். வீண் விவாதங்களில் பங்கேற்க வேண்டாம். விரயத்தில் குரு இருப்பதால், மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு.
சந்திராஷ்டமம்: 2.11.2025 காலை 11.28 முதல் 4.11.2025 பகல் 12.34 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: தினமும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள். முருகனை தரிசியுங்கள்.


