(25.9.2025 முதல் 1.10.2025 வரை)
சாதகங்கள்: ராசியில் சுக்கிரன் அமர்ந்திருக்கிறார். ராசிநாதன் இரண்டில் இருப்பதும் 5க்குரிய குரு லாபஸ்தானத்தில் இருந்து தைரிய ஸ்தானத்தைப் பார்ப்பதும் சிறப்பான பலன்களைத் தரும். வெற்றிகள் தேடி வரும்.சுபகாரியத் தடைகள் நீங்கும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சி வெற்றி பெறும். வங்கிகள் எதிர்பார்த்த உதவிகளை அளிக்கும். பொதுவாழ்வில் உள்ளவர் களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். போட்டிகள் விலகும். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மனை வீடு வில்லங்கங்கள் மறைந்து நல்ல விலைக்குப் போகும். ராசியில் கேது இருந்தாலும் சுக்கிரனும் இருப்பதால் பாதிப்பு குறைவாக இருக்கும்.
கவனம் தேவை: மனைவி அல்லது கணவனின் ஆரோக்கியத்தில் பிரச்னைகள் வரலாம். கவனம் தேவை. உறுதியுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டிய காலம் இது. குடும்பத்தில் சலசலப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் பேச்சுக்களால் பிரச்னைகளை வளர்த்துக் கொள்ள வேண்டாம். மூட்டு வலி, கண்வலி முதலிய பிரச்னைகள் தோன்றலாம். ராசிக்குள் கேதுவும், ஏழாம் இடத்தில் ராகுவும் இருப்பது குடும்பத்தில் குழப்பத்தைத் தரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். நண்பர்களிடம் மற்றும் புதிதாக அறிமுகம் ஆகியவர்களிடம் சற்று விலகியே இருங்கள். அவசர காரியங்களில் இறங்கி அவஸ்தைப்படாதீர்கள்.
பரிகாரம்: அஷ்டமி அன்று துர்க்கையை வணங்குங்கள். அனைத்தும் நலமாகும்.