(7.8.2025 முதல் 13.8.2025 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் சுக்கிரன் குருவோடு இணைந்து பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து ராசியைப் பார்வையிடுவது அற்புதமான அமைப்பு. குடும்பத்தில் அமைதி, தொழிலில் முன்னேற்றம், பொருளாதார ஏற்றம் முதலியவை நிச்சயமாக இருக்கும். அதோடு அவர் தைரிய ஸ்தானத்தையும் பார்வையிடுகின்றார் எனவே எடுத்த காரியங்கள் தடையின்றி நிறைவேறும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உண்டு. அதற்கு துணை புரிவார் 11-ம் இடத்தில் இருக்கும் கேது பகவான். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள், துணிமணிகள் வாங்கும் வாய்ப்பு உண்டு. குடும்பச் செலவுகளை எளிதாகச் சமாளித்து விடுவீர்கள்.
கவனம் தேவை: 12 இல் செவ்வாய் என்பதால் மனதில் பதற்றம் அவ்வப் பொழுது வரும். எந்தக் காரியத்திலும் அவசரப்படும் குணம் அதிகரிக்கும். அதனால் காரியங்கள் தவறாக முடியும். பதறாதீர்கள். அவசரப்படாதீர்கள். பிறர் விஷயத்தில் தலையிடாதீர்கள். ரத்த அழுத்தம், சர்க்கரை முதலிய வியாதிகளைக் கண்காணித்து மருத்துவம் பார்த்துக் கொள்ளுங்கள். சகோதர உறவுகளோடு உரசல்கள் வேண்டாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு விளக்கு போடுங்கள். வேண்டியது கிடைக்கும்.