(28.8.2025 முதல் 3.9.2025 வரை)
சாதகங்கள்: தன குடும்ப காரகனான செவ்வாய் 12ல் இருந்தாலும் அதன் தோஷத்தைக் குறைக்கும் வண்ணம் குரு ராசியைப் பார்வை இடுகின்றார். ராசியின் மூன்றாம் இடத்தைப் பார்ப்பதன் மூலம் சகோதர கருத்து வேற்றுமை இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்பைத் தராது. ஐந்தாம் இடத்தில் உள்ள சனி ராகு தோஷங்கள் தீரும். மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஒரு நல்ல திருப்பம் ஏற்படும். திருமணம் முதலிய சுப காரியங்களில் உள்ள தடை அகலும். ராசிநாதன் சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதாலும் லாபஸ்தானத்தில் சூரியனும் புதனும் இணைந்து இருப்பதாலும் தொழில் முயற்சிகள் வெற்றி பெறும். புதிய தொழில்களுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்கள் புதிய வாய்ப்பினைப் பெறுவார்கள். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு உண்டு. அரசாங்க காரியங்களில் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகள் நல்லபடியாக முடியும். இருக்கும் இடத்தை விற்றுவிட்டு புதிய இடத்தை வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.
கவனம்தேவை: குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பூர்வீக சொத்து தகராறுகள் நீடிக்கும். திடீர் திடீரென்று கோபம் ஏற்பட்டு உணர்ச்சி வசப்படுவீர்கள். ஏதோ ஒரு சூழ்நிலை உங்களை உணர்ச்சி வசமாக்கி நிலை குலையச் செய்யும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். ரத்தசோகை முதலிய நோய்களால் துன்பப்படுபவர்கள் மிக கவனமாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.
பரிகாரம்: லட்சுமி நரசிம்மரை வணங்கவும்.