(31.7.2025 முதல் 6.8.2025 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் ஒன்பதில் இருப்பதும், அங்கே உள்ள குரு ராசியைப் பார்ப்பதும் மிகச் சிறப்பான பலன்களைத் தரும். இரண்டு சுபகிரகங்களின் வலிமை, துலா ராசிக்காரர்களுக்கு யோகம். அந்தவகையில் பொருளாதாரம், குடும்ப நிலைமை மற்றும் எதிர்பார்ப்பு எல்லாமே சிறப்பானதாக இருக்கும். விரும்பியது கிடைக்கும். அல்லது கிடைத்ததை விரும்புவீர்கள். வீட்டில் ஆடம்பரப் பொருட்கள், துணிமணிகள் வாங்க வாய்ப்புண்டு. குடும்பச் செலவுகளை எளிதாகச் சமாளித்து விடுவீர்கள். பழைய கடன்களும் அடைபடும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். சூரியன் 10ல் வந்திருப்பதால், அரசாங்க காரியங்களில் சாதகம் உண்டு.
கவனம் தேவை: தொழில் போட்டிகள் கடுமையாக இருக்கும். 5ல் சனி ராகு இணைந்து இருப்பதால் வழக்குகள், சொத்து பிரச்னைகளில் தாமதம் நீடிக்கும். சாதகமாக முடிவது சற்று சிரமம். 10ல் புதன் அமர்ந்திருப்பதால் இடமாற்றங்கள் ஏற்படலாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை துர்க்கைக்கு விளக்கு போடுங்கள். வேண்டியது கிடைக்கும்.