(21.8.2025 முதல் 27.8.2025 வரை)
சாதகங்கள்: ராசிக்கு ஆறில் உள்ள சூரியன் ஆட்சி பெற்று அற்புதமாக இருக்கிறார். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். உங்களுக்கு எதிராக வேலை செய்பவர்கள் அடங்கிப் போவார்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும். திறமை அங்கீகரிக்கப்படும். அரசாங்க உதவிகள் கிடைக்கும். நிர்வாகத் திறனால் புதிய வளர்ச்சியைப் பெற வாய்ப்புண்டு. தொழில் ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் தொழிலில் வெற்றி உண்டு. லாபமும் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கும். ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால் பொருளாதாரத்தில் குறைவு இல்லை. ஏதோ ஒரு விதத்தில் உங்களுக்கான பணம் கிடைத்துவிடும்.
கவனம் தேவை: செலவுகள் அதிகரிக்கும். 12ல் சனி ராகு உள்ளதால் வீண் விரயங்களும் தேவையற்ற மனக் கவலைகளும் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பாராத விதத்தில் அவமானங்கள் நிகழலாம். ஏழில் செவ்வாய் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகளை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டாம்.
பரிகாரம்: பசு மாட்டுக்கு உணவு தாருங்கள். பறவைகளுக்குத் தானியம் போடுங்கள். குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள்.