(4.12.2025 முதல் 10.12.2025 வரை)
சாதகங்கள்: தன குடும்ப அதிபதி செவ்வாய் பத்தில் அமர்ந்திருக்கிறார். அவருக்கு அங்கு பலம் அதிகம். திக்பலம் பெறுகிறார். பாக்கியஸ்தானத்தில் சூரியனும் புதனும் இணைந்து புத ஆதித்ய யோகம் பெறுகிறார்கள். சுக்கிரனும் அவர்களோடு இருப்பது சிறப்பு. அவர்களை ராசிநாதன் குரு பார்ப்பது இன்னும் சிறப்பு. ஐந்தாம் இடத்தில் குரு உச்சம் பெற்றிருப்பதும், ராசியை பார்ப்பதும் பல நன்மைகளை மீன ராசி நேயர்களுக்குத் தரும் மாதம் முழுவதும் பண பற்றாக்குறை இருக்காது. ஏழரைச் சனி தோஷமும் பெரிய அளவில் வேலை செய்யாது. அதிக உழைப்பு இருந்தாலும் கைமேல் ஆதாயம் கிடைக்கும். சுப நிகழ்ச்சி தடையின்றி நடக்கும். குழந்தைகளின் கல்வி முதலிய முன் னேற்றங்கள் மகிழ்ச்சியைத் தரும்.
கவனம் தேவை: ராசிக்கு 12ல் ராகு இருப்பதாலும் ராசியை சனி நெருங்குவதாலும் மனதில் ஒரு இறுக்கமான கலக்கம் இருந்து கொண்டே இருக்கும். காரணமில்லாத அந்தக் கலக்கம், உங்களைச் சோர்வடையச் செய்யலாம் கவனம் தேவை. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கண்டிப்பு அதிகரிக்கும். அதனால் மனஸ்தாபம் வரும். சிலருக்கு இடமாற்றம் ஊர்மாற்றம் உண்டு.
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் விரதம் இருங்கள். லட்சுமி நரசிம்மரை வணங்குங்கள்.