(14.8.2025 முதல் 20.8.2025 வரை)
சாதகங்கள்: இதுவரை அஷ்டமத்தில் இருந்த சூரியன் பாக்கியஸ்தானத்திற்கு மாறி ஆட்சி பெறுவது நல்ல அமைப்பு. தொழில் முயற்சிகள் பலனளிக்கும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் புது வீடு கட்டிக் கொண்டு செல்லும் வாய்ப்புண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். பொருளாதாரச் சிக்கல் தீரும். கணவன் மனைவி உறவுகள் பலப்படும். திருமணமான பெண்களுக்கு கருத்தரிக்கும் கிரக நிலைகள் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும் அமைப்புண்டு. தகவல் தொடர்பு முதலிய அமைப்புகளில் சாதகம் உண்டு.
கவனம் தேவை: நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். பிறர் பிரச்னையில் தலையிட வேண்டாம். குறிப்பாக பெண்களால் பிரச்னை வரலாம். தந்தையாரோடு இணக்கமான உறவுகள் இருக்காது. தந்தை வழியில் கசப்புக்கள் வரும். அவருடைய உடல் நலனும் சற்று பாதிப்புக்கு உள்ளாகும். உணவுக் கட்டுப்பாட்டையும் மருந்துக் கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும்.
பரிகாரம்: கால்நடைகளுக்கு உணவளிக்கவும். அனுமனை வணங்கவும்.