(30.10.2025 முதல் 5.11.2025 வரை)
சாதகங்கள்: ராகுவும் சனி பகவானும் அனுகூலமாக இருக்கிறார்கள். ராசிநாதன் குரு அஷ்டம ராசியில் இருப்பதால் நேரடி பலம் இல்லை என்றாலும், அவருடைய பார்வை உங்கள் தன சுகஸ்தானத்தில் விழுவதால் பொருளாதாரத்தில் குறைவு ஏற்படாது. பன்னிரண்டாம் இடத்தில் செவ்வாய் அமர்ந்து குரு பார்ப்பதால், சுபச் செலவுகள் ஏற்படும். அதன் மூலம் பணம் செலவாகும். லாபாதிபதியான சுக்கிரன் லாபஸ்தானம் வருவதால், தொழில் லாபம் அதிகரிக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் கிடைக்கும். முக்கியமானவர்களின் ஒத்துழைப்பு கிடைத்து லாபம் அடைவீர்கள்.
கவனம் தேவை: உத்தியோகத்தில் உள்ளவர்கள், மேலதிகாரிகளிடம் சரியானபடி நடந்து கொள்ள வேண்டும். சிலருக்கு வேலையில் இடம் மாற்றம் உண்டு. வெளிநாடு செல்லும் முயற்சியில் தடங்கல்கள் ஏற்படும். குறித்த நேரத்தில் குறித்த வேலைகளை செய்ய முடியாத சங்கடம் வரும். கவனம் தேவை.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை தோறும் வழிபடுங்கள். சங்கடங்கள் விலகும்.