(31.7.2025 முதல் 6.8.2025 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் லாபாதிபதி சுக்கிரனோடு இணைந்து 7ல் இருப்பதும், இருவரும் இணைந்து ராசியைப் பார்ப்பதும் சிறப்பு. குடும்ப உறவுகள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். அலைச்சல் இருந்தாலும் அவ்வப்பொழுது ஆறுதல் கிடைக்கும். செலவுகள் அதிகரித்தாலும் சிக்கனத்திற்கு வழி கிடைக்கும். 3ல் சனி ராகு இணைப்பு உங்களுக்கு வெற்றிப் பாதையைக் காட்டும். வருமானம் போதிய அளவு உண்டு. புதன் அஷ்டமத்தில் இருந்தாலும் அதிக கஷ்டங்கள் வராது. அலுவலகத்தில் ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு அங்கீகாரமும் நல்ல பெயரும் கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு தகுந்த சன்மானம் பெறுவீர்கள்.
கவனம் தேவை: சப்தம ஸ்தானத்தில் குரு சுக்கிரன் இணைந்து இருக்கிறார்கள். ஆரோக்கியத்தை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் தீவிரமான கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அலுவலகச் சூழ்நிலை பிரயாணங் களைத் தந்து கொண்டே இருக்கும் என்பதால் அதற்கேற்றபடி உணவுக் கட்டுப்பாட்டையும் மருந்துக் கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டும்.
பரிகாரம்: ராமச்சந்திர மூர்த்தியை தியானித்துக் கொள்ளுங்கள். முடிந்தால் ராமஜெயம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொல்லிவிட்டு காரியங்களைச் செய்யுங்கள்.