search-icon-img
featured-img

விருச்சிகம்

Published :

(30.10.2025 முதல் 5.11.2025 வரை)

சாதகங்கள்: ராசியும் ராசிநாதன் ஆட்சி பெறுவதும் சப்தமாதிபதி சுக்கிரன் தனது ராசியின் உச்சம் பெறுவதும், இரண்டு ஐந்துக்குரிய குரு பகவான் கடகத்தில் உச்சம் பெற்று ராசியைப் பார்ப்பதும், பல கோணங்களில் சாதகமான அமைப்பு. நினைத்த செயல்கள் நிறைவேறும் நல்ல நேரம். கோயில் தரிசனம், நன்கொடைகள் அளித்தல், தர்ம காரியங்கள் போன்றவற்றில் கவனம் செலுத்தும் பாக்கியம் உண்டு. பொருளாதார நிலையில் நீங்கள் எதிர்பாராத மாற்றங்களும் உண்டு. ஆதாயம் தரும் தகவலால் மகிழ்ச்சி உண்டு. சுபகாரியங்கள் நடைபெற வாய்ப்புண்டு.

கவனம் தேவை: வெளியூர் பயணங்களில் அலைச்சல்களும், அதனால் உடல் நலக்குறைவும் ஏற்படும். பொருள்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். பொருட்களை தவற விட்டுவிடுவதும், பணம் கொடுக்கல் வாங்கல்களில் சிறு ஏமாற்றமும் இருக்கும் என்பதால் மிகுந்த கவனம் தேவை. சனி ராகு மற்றும் 12ல் சூரியன் போன்ற கிரக

சஞ்சாரங்களால் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம்: வயது முதிர்ந்தவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவுங்கள். வாழ்க்கையில் திருப்பங்கள் உண்டு.