இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

விருச்சிகம்

Published: 31 Jul 2025

(31.7.2025 முதல் 6.8.2025 வரை)

சாதகங்கள்: ராசிநாதன் செவ்வாய் லாபஸ்தானத்தில் பலமாக இருக்கின்றார். அவர் உங்கள் ஐந்தாம் இடத்தையும் பார்ப்பது சிறப்பு. நிலம் வீடு முதலிய விஷயங்கள் சாதகமாக இருக்கும். வீடு கட்டும் முயற்சி பலிக்கும். மனை வாங்கிப் போடுவதாக இருந்தால், அதற்காக வாய்ப்பு வந்து சேரும். பாக்கியஸ்தானத்தில் புதன் இருப்பதால் பத்திரிகையாளர்களுக்கும் ஊடக வியலாளர்களுக்கும் முன்னேற்றமான பாதை பிறக்கும். ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் புதிய வாய்ப்புகள் மூலம் வெளிச்சம் பிறக்கும்.

கவனம் தேவை: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அஷ்டமத்தில் குரு சுக்கிரன். பாக்கியஸ்தானத்தில் சூரியன். நான்காம் இடத்தில் சனி ராகு என பல கிரக நிலைகளும் சாதகமற்று இருப்பதால், செலவுகளை கவனித்துச் செய்யவும். மருந்துகளை மிகச் சரியாக உட்கொள்ளவும். தேவையற்ற அலைச் சலையும் பிரயாணங்களையும் குறைத்துக் கொள்ளுங்கள். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பரிகாரம்: வயதில் பெரியவர்களுடைய ஆசி முக்கியம். உடல் ஊனமுற்றவருக்கு உதவுங்கள்.

பிறந்தநாள் பலன்கள்