(4.9.2025 முதல் 10.9.2025 வரை)
சாதகங்கள்: ராசி நாதனான சுக்கிரன் மூன்றாம் இடத்தில் அமர, லாபாதிபதி குரு தன குடும்ப ஸ்தானத்தில் அமர, பொருளாதாரச் சிக்கல் இருப்பதற்கு வழியில்லை. தசாபுத்தி சரியில்லாதவர்களுக்கு வேண்டுமானால் சற்று முன் பின்னாக இருக்குமே தவிர, வலிமையான ஜாதகங்கள் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல காலம். சிந்தனை நல்ல விதமாக இருக்கும். அதைக் கெடுத்துக் கொள்ளாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுப கிரகங்களின் வலிமை என்பது நாம் இருக்கும் இடம் தேடி நற்பலன்கள் வருவது. ஆனால் அது பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. சுபச் செலவுகள் ஏற்படும். குடும்பச் சூழ்நிலை திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் அடைபட்டு விடும். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
கவனம் தேவை: விரயத்துக்கு உரிய செவ்வாய் ஐந்தாம் இடத்தில் இருப்பது சிறப்பான அமைப்பல்ல. பிள்ளைகளால் கூடுதல் செலவுகள் ஏற்படும். சிலருக்கு அவர்களைப் பற்றிய கவலையால் அமைதி கெடும். நான்கில் சூரியன் இருப்பதை கவனத்தில் கொள்ளுங்கள். நாம் இருக்கும் இடத்தை தேடி வம்பு வழக்குகள் வரும். கவனமாகக் கையாளாவிட்டால் சிக்கல்தான்.
பரிகாரம்: குலதெய்வத்தை நினைத்துக் கொள்ளுங்கள். வணங்குங்கள்.