(28.8.2025 முதல் 3.9.2025 வரை)
சாதகங்கள்: இரண்டு சுபகிரகங்கள் வலிமையான அமைப்பில் இருக்கின்றன. தனகாரகன் குரு தனஸ்தானத்தில் இருக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் குரு, ஸ்தான பலத்தோடு இருப்பதால் குடும்பம் செழிப்பாக இருக்கும். மூன்றாம் இடத்தில் சுக்கிரன் வலிமையாக இருப்பதால், பொருளாதார தேக்கம் இருக்காது. வீட்டில் மகிழ்ச்சி நிலவும். சகோதரர்கள் உதவுவார்கள். பத்தாம் இடத்தில் சனி, ராகு இணைந்து இருப்பதால், தொழில்களில் வளர்ச்சி இருக்கும். சனி, ராகு இருப்பது மட்டும் காரணமல்ல சனி ராகுவை தனஸ்தானத்தில் இருந்து குரு பார்ப்பதும் முக்கியமான காரணம். சூரியனோடு புதன் இணைந்து இருப்பதால், வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
கவனம் தேவை: நான்காம் இடத்தில் சூரியன் கேது இணைந்து இருக்கின்றார்கள். சுகஸ்தானத்தில் இப்படி ஒரு இணைவு இருப்பது சங்கடங்களைத் தரும். அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையில்லாத விரோத மனப்பான்மை பகைமையைப் பெற்று தரும்.
சந்திராஷ்டமம்: 1.9.2025 இரவு 7.55 முதல் 4.9.2025 காலை 5.21 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப் பிரதிவாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: பசு மாட்டுக்கு வாழைப்பழமோ கீரையோ வழங்குங்கள். பெருமாளையும் தாயாரையும் வணங்குங்கள்.