(20.11.2025 முதல் 26.11.2025 வரை)
சாதகங்கள்: வார இறுதியில் ராசிநாதன் சுக்கிர பகவான் ஏழாம் இடத்தில் சூரியனோடு இணைந்து உங்கள் ராசியை வாய்ப்பு பொன்னான நேரமாக அமையும். அங்கே செவ்வாயும் இணைந்து இருப்பதால் சுக்கிர மங்கள யோகம் ஏற்படும். புதிய ஆடை அணிகலன்கள், ஆடம்பரப் பொருட்கள் என வாங்குவதில் கவனம் செல்லும். எச்சரிக்கையோடு இல்லாவிட்டால் பொருளாதாரத்தில் சிரமம் ஏற்படும். எல்லா காரியங்களிலும் ஒரு தடைக்குப் பின் தான் முயற்சிகள் முயற்சி பலிக்கும். எப்படியாயினும் குருவின் பார்வை 7ம் ராசியில் விழுவதால் நண்பர்களின் உதவியும் குடும்பத்தில் மனைவியின் ஒத்துழைப்பும்
பிரச்னைகளைத் தீர்க்கும்.
கவனம் தேவை: குழந்தைகளுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.உறவினர்களிடம் சற்று எச்சரிக்கையோடு பழகவும். மற்றவர்களின் வேலை களில் தலையிட வேண்டாம். தேவையற்ற அலைச்சல்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்பு உண்டு.
சந்திராஷ்டமம்: 22.11.2025 பிற்பகல் 4.48 முதல் 25.11.2025 காலை 4.27 வரை சந்திராஷ்டமம் உண்டு. பேச்சில் கவனமாக இருக்கவும். வாதப்பிரதி வாதங்களில் ஈடுபடவேண்டாம்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை சிவன் கோயிலில் உள்ள துர்க்கையை விளக்கு போட்டு வணங்குங்கள்.