(7.8.2025 முதல் 13.8.2025 வரை)
சாதகங்கள்: ராசிநாதன் புதனும் சூரியனும் இணைந்து லாப ஸ்தானத்தில் இருப்பது சிறப்பான பலன்களைத் தரும். ஆறாம் இடத்தில் அமர்ந்த ராகுவும் சனியும் ஆற்றலைத் தருவார்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. வணிகத்தில் லாபம் கிடைக்கும். புதிய தொழிலை ஆரம்பிக்கும் வாய்ப்பு உண்டு. அரசாங்க உதவிகள் ஒப்பந்தங்கள் சாதகமாகும். நினைப்பதும் நன்றாகவே இருக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்களுக்கும், அரசாங்க ஊதியம் பெறுபவர்களுக்கும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு முதலியவை கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
கவனம் தேவை: கன்னி ராசியில் செவ்வாய் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். சகோதர உறவு முறைகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். 12ல் கேது இருப்பதால் உடல்நிலை பாதிப்புகள் ஏற்படலாம் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கலாம். அதே நேரத்தில் ஆன்மிகத்தில் கவனத்தைச் செலுத்தி உபாதைகளைக் குறைத்துக் கொள்ளவும். பத்தில் குரு சுக்கிரனோடு இணைந்திருப்பதால் புது முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம்.
பரிகாரம்: வாரந்தோறும் அருகாமையில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வாருங்கள். பிரச்னைகள் தீரும்.