(20.11.2025 முதல் 26.11.2025 வரை)
சாதகங்கள்: பதினொன்றாம் இடத்தில் குரு பகவான் உச்சத்தில் சஞ்சரிக்கிறார். அவர் ஏழாம் பார்வையாக உங்கள் பூர்வ புண்ணிய ஸ்தானத்தைப் பார்ப்பது சிறப்பான பலன்களைத் தரும் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை உருவாகும். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பழைய கடன்கள் அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். அதைப்போல பணி மாற்றம் விரும்பியவர்களுக்கும் பணி மாற்றம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. நண்பர்கள் துணை புரிவார்கள். எதிர்பார்த்த முன்னேற்றம் எளிதில் வந்து சேரும். மூன்றாம் இடத்தில் சூரியன் இருப்பதால் ஆத்ம பலம் அதிகரிக்கும் அரசாங்க காரியங்கள் சாதகமாகும்.
கவனம் தேவை: பன்னிரண்டாம் இடத்தில் கேது இருப்பதால் என்னதான் பார்த்துப் பார்த்துச் செலவு செய்தாலும் சில நேரங்களில் வேண்டாத செலவுகள் முன்னால் வந்து நிற்கும். ஆடம்பர விஷயங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அவசரத்தாலும் முன்யோசனை இல்லாததாலும் சில காரியங்களில் தவிர்க்க முடியாத தாமதங்கள் ஏற்படும்.
பரிகாரம்: ராமரை தியானம் செய்யுங்கள் அல்லது நோட்டில் ராம ஜெயம் எழுதுங்கள்.