இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

கன்னி

Published: 25 Sep 2025

(25.9.2025 முதல் 1.10.2025 வரை)

சாதகங்கள்: தன பாக்யாதிபதி சுக்கிரன் 12-ல் அமர்வது குறித்துக் கவலை வேண்டாம். அது அவருக்கு நல்ல இடம் தான். அதோடு உங்கள் தன குடும்ப ஸ்தானத்தை, குரு பார்ப்பதும் சிறப்பு. எனவே குடும்பப் பிரச்னைகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில் நல்ல மாற்றம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்களில் சுமுக நிலை இருக்கும். தகவல் தொழில்நுட்பத்துறை சிறப்பாக நடைபெறும். பிரச்னைகளை கவனத்துடன் கையாளுவீர்கள் காலி மனை விற்பனையில் லாபம் உண்டு. வீடு கட்டுவது, கிரகப்பிரவேசம் செய்வது முதலிய முயற்சிகள் மகிழ்ச்சி அளிக்கும் ரியல் எஸ்டேட் துறையில் நல்ல லாபம் உண்டு திட்டமிட்டு காரியங்களைச் செய்யும் ஆற்றல் அதிகரிக்கும்.

கவனம் தேவை: பிறர் உங்கள் மீது பொறாமைப் படலாம். அவசரப்பட்டு காரியங்களில் இறங்க வேண்டாம். சில விஷயங்களில் எதிர்பாராத காரியத் தாமதம் உண்டு. அலைச்சலும் பிரயாணமும் உண்டு அதனால் உணவு, தூக்கம் கெட்டு ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். சிலருக்கு இடமாற்றம் உண்டு. விரயம் அதிகரிக்கும். கண், பல் வைத்தியம் செய்து கொள்ள நேரலாம்.

பரிகாரம்: பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சாற்றி வழிபடுங்கள்.

 

பிறந்தநாள் பலன்கள்