இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

விருச்சிகம்

Published: 24 Apr 2025

(26-4-2025 முதல் 25-11-2026 வரை)

(விசாகம் 4ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை வரை)

குடும்பம்: விருச்சிக ராசியினருக்கு, "அர்த்தாஷ்டக ராசி" எனப்படும் நான்காம் இடத்தில் சனி - ராகு சேர்க்கை ஏற்பட்டுள்ளது. இக்கிரக நிலை நன்மை செய்யாது! அதற்குப் பதிலாக, குடும்பத்தில் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். மிக முக்கியமாக, உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். தசா, புக்திகள் நல்லபடி அமையாவிட்டால், விபத்துகள் ஏற்படுவதற்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன. இவ்விஷயத்தில், எமது "தினகரன்" வாசக அன்பர்கள் ஒரு மிக முக்கிய ஜோதிட உண்மையைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும். அது என்னவெனில், சனி, ராகு ஆகிய இரு கிரகங்கள், பகல் நேரத்தைவிட, இரவு நேரங்களில்தான் அதிக பலமும், வீரியமும் பெறுகின்றன. ஆதலால், மிகக் கொடிய விபத்துகள் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் நிகழ்கின்றன. இது அனுபவ உண்மை!சிறு விஷயங்களுக்குக்கூட அதிக உழைப்பும், முயற்சியும், அலைச்சலும் தேவைப்படும். திருமண முயற்சிகளுக்குத் தடங்கல்கள் உருவாகும். வரனை நிச்சயம் செய்வதில் கருத்துவேறுபாடுகளும், குழப்பங்களும் நிலவும். பூர்வீகச் சொத்து சம்பந்தமான பிரச்னைகள், ம ன-நிம்மதியைப் பாதிக்கும். நீதிமன்ற வழக்குகள் இருப்பின், அவற்றின் இழு-பறி நிலை நீடிக்கும்.இரவு நேரங்களில் வாகனம் ஓட்டுவதையும், தனியே வெளிச் செல்வதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும். கணவர் - மனைவியரிடையே அந்நியோன்யக் குறைவும் ஏற்படும். சிம்ம லக்கினத்தில் கேது அமர்ந்திருப்பதால், கற்பனையான அச்சம், அமைதியின்மை - மன நிம்மதியைப் பாதிக்கும். வரவைவிடச் செலவினங்களே அதிகமாக இருக்கும். மருத்துவச் செலவுகளில் பணம் விரயமாகும்.

உத்தியோகம்: உங்கள் ராசிக்கு அர்த்தாஷ்டக ராசியான கும்ப ராசியில் சனி - ராகு இணைந்துள்ள இத்தருணத்தில், உத்தியோக (ஜீவன) ஸ்தானமாகிய சிம்ம ராசியில் கேது சஞ்சரிப்பதால், அலுவலகப் பணிகளில் அதிருப்தியும்,சோர்வும், பின்னடைவும் ஏற்படக்கூடும். மேலதிகாரிகளின் அளவிற்கு அதிகமான கண்டிப்பு மன நிம்மதியைப் பாதிக்கும். வேறு வேலைக்கு முயற்சிக்க அவா மேலிடும். பொறுமை, நிதானம் மிக மிக அவசியம். சில தருணங்களில், உணர்ச்சிவசப்பட்டு, தவறான முடிவெடுத்துவிட சாத்தியக்கூறு உள்ளதை சனி - ராகுவின் சஞ்சார நிலைகள் உணர்த்துகின்றன. புதிய வேலைக்கு முயற்சிக்கும் விருச்சிக ராசி அன்பர்கள், இடைத்தரகர்கள் மூலம் பணத்தை இழந்துவிடக்கூடும். எச்சரிக்கை அவசியம்.

தொழில், வியாபாரம்: வர்த்தகத் துறைக்கு ஆதிபத்தியம் கொண்டுள்ள சனி பகவான், ராகுவுடன் சேர்ந்து, ராசிக்கு நான்காம் (அர்த்தாஷ்டக ராசி) இடத்தில் சஞ்சரிப்பது, கடினமான, நியாயமற்ற போட்டிகளை நீங்கள் சமாளிக்க வேண்டியிருக்கும் என்பதை எடுத்துகாட்டுகிறது. கூட்டாளிகளினாலும், பிரச்னைகள் ஏற்படக்கூடும். திட்டமிட்டு செலவு செய்தல் அவசியம்.

கலைத் துறையினர்: ராகு, சனியுடன் சேர்ந்து, கும்ப ராசியில் சஞ்சரிப்பது, நன்மை செய்ய வாய்ப்பில்லை. "நிச்சயமாகக் கிடைக்கும், நமக்குதான் அது…." என்றிருந்த லாபகரமான தருணங்கள் வேறு ஒருவருக்குப் போய்விடும். வருமானம் குறையும். கூடியவரையில், கையில் இருப்பதைக் கொண்டு சமாளிக்க வேண்டிவரும். திரைப்பட நடிகை - நடிகர்கள், தங்கள் ஆடம்பரச் செலவுகளையும், விளம்பரச் செலவுகளையும் கண்டிப்பாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதை கிரக நிலைகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

அரசியல் துறையினர்: கிரக நிலைகள் அனுகூலமாக இல்லை, உங்களுக்கு! குறிப்பாக, ராகு - சனி பகவான் கூட்டுறவு நன்மை செய்யாது. கட்சியில் ஆதரவு குறையும். மேல்மட்டத் தலைவர்களின் போக்கு கவலையை அளிக்கும்.

மாணவ - மாணவியர்: முழு மனதையும் படிப்பில் முழுமையாகச் செலுத்த இயலாதபடி, ஏதாவது ஓர் பிரச்னை மன அமைதியைப் பாதிக்கும். நெருங்கிய நண்பர்களாலும் சிரமங்கள் உண்டாகும். தவிர்க்க முயன்றாலும், பயன் இராது. வெளிநாடு செல்லும் முயற்சிகளிலும் தோல்வியே ஏற்படும்.

விவசாயத் துறையினர்: கடுமையாக உழைத்தும், பலன் மட்டும் குறைவாகவே இருக்கும். சனி - ராகுவின், கும்ப ராசி சஞ்சார தோஷத்தினால், விளைச்சல் பாதிக்கப்படும். தண்ணீர்ப் பற்றாக்குறையும், கால்நடைகள் நோய்வாய்ப்படுவதும் விவசாயச் செலவுகளை அதிகரிக்கும்.

பெண்மணிகள்: ஆரோக்கியத்திலும், அன்றாட உழைப்பிலும் நிதானமும், கவனமும் அவசியம். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகள், தங்கள் அன்றாடப் பொறுப்புகளில் மனதை ஊன்றிச் செலுத்துதல் அவசியம் என்பதை சனி - ராகுவின் அர்த்தாஷ்டக ராசி நிலை எடுத்துக்காட்டுகிறது. திருமணமான பெண்கள், நெருங்கிய உறவினர்களிடம் பேசுவதிலும், நடந்துகொள்வதிலும் ஜாக்க்ிரதையாக இருக்கவேண்டும் என்பதையும் கும்ப ராசி எச்சரிக்கை செய்கிறது.

அறிவுரை: சிக்கனம், தேவை இக்கணம் என்பதை உணர்ந்து, அநாவசியச் செலவினங்களைக் கட்டுப்படுத்த முயற்சியுங்கள்.2. பிறருடன் பேசுவதிலும், பழகுவதிலும் அளவோடு இருத்தல் அவசியம்.3. இரவு நேரங்களில் வாகனங்கள் ஓட்டுவதையும், தனியே செல்வதையும் தவிர்க்கவும்.

பரிகாரம்: திருஞான சம்பந்தப் பெருமான் நமக்கு அருளிய கீழ்க்கண்ட தேவாரப் பாடலை தினமும், காலை - மாலை இருவேளைகளிலும் சொல்லி, சிவ பெருமானைப் பூஜித்து வந்தால், தங்களையும், தங்கள் சுற்றத்தாரையும், கவசனமெனக் காத்தருள்வார்.

"மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு

சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு

தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு

செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே…"

பிறந்தநாள் பலன்கள்