2.11.25 முதல் 8.11.25 வரை
காரியதாமதம் ஏற்படும். அடுத்தவர்களுக்காக எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் சற்று விழிப்புடன் இருப்பது நல்லது. பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும்போது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்குவர தாமதம் ஆகலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் அலைச்சலையும், வேலை பளுவையும் சந்திக்க நேரிடும். சிலருக்கு இட மாற்றம் உண்டாகலாம். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் கணவன்,மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதும் நல்லது. பெண்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். மாணவர்கள் கல்வி பற்றிய கவலையை தவிர்த்து கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் இருக்கும்.
பரிகாரம்: பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபட கடன் தொல்லை அகலும்.