10.8.25 முதல் 16.8.25 வரை
வாக்கு வன்மையால் எதையும் செய்வீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பார்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்னைகள் நீங்கி அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும். திடீர் பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு திடீர் கோபங்கள் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். திறமை வெளிப்படும்.
பரிகாரம்:கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.