26.10.25 முதல் 1.11.25 வரை
எல்லா வகையிலும் நல்ல பலன் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சம்பந்தமான விஷயங்களில் கூடுதல் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். தொழில் வியாபாரம் தொடர்பான கவலை மறையும். லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களுக்கு சேமிக்கும் எண்ணம் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். கலைத்துறையினருக்கு பொருளாதாரத்தில் பிரச்னை இருக்காது. புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக் கொள்வது நல்லது.
பரிகாரம்: பராசக்தியை வழிபட்டு வருவது காரிய தடையை நீக்கும்.


