7.9.25 முதல் 13.9.25 வரை
எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். பேச்சில் நிதானம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியம் அடையும். குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வர மனோதிடம் உண்டாகும்.