9.11.25 முதல் 15.11.25 வரை
மன உறுதி அதிகரிக்கும். எதையும் கண்டு அஞ்சாமல் பணியாற்றுவீர்கள். வாக்குவன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். பணத்தேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பெண்களுக்கு புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு புதிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்களுக்கு ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும்.
பரிகாரம்: சனி பகவானை வணங்கி வர கஷ்டங்கள் குறையும்.


