7.9.25 முதல் 13.9.25 வரை
பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும் வாரம். பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்னைகள் தீரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து வந்த இழுபறி நீங்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. குடும்பத்தில் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும். கலைத்துறையினருக்கு மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை பிரார்த்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.