28.9.25 முதல் 4.10.25 வரை
மனகஷ்டங்கள் அகலும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். கலைத்துறையினருக்கு காரியதாமதம் நீங்கும். வீண்கவலைகள் அகலும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: வாராகி அன்னையை தரிசித்து வணங்க திருமண தடைகள் அகலும்.