26.10.25 முதல் 1.11.25 வரை
வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது. குடும்ப ஸ்தானத்தை செவ்வாய் பார்க்கிறார். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு. தொழில் வியாபாரத்தில் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். உத்யோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவார்கள். எதிர்பார்த்த பணியிட மாற்றம் கிடைக்கும். மேலிடத்தின் ஆதரவு அனுசரணை கிடைக்கும். பெண்களுக்கு சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்னைகளையும் தீர்த்து விடுவார்கள். கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது. விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பர். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைவர்.
பரிகாரம்: பெருமாளை வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும்.


