28.9.25 முதல் 4.10.25 வரை
முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தருமசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சீராக நடக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பர். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பெண்களுக்கு நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் துர்க்கை அம்மனை தரிசனம் செய்து தீபம் ஏற்றி வர காரிய தடைகள் நீங்கும்.