2.11.25 முதல் 8.11.25 வரை
எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக பயணம் செல்ல வேண்டி வரலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். பெண்களுக்கு மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும். மாணவர்களுக்கு கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வர குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.