9.11.25 முதல் 15.11.25 வரை
எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் அதிகமாகும். எதிர்ப்புகள் விலகும். புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். பெண்களுக்கு மனோ தைரியம் கூடும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். பலரும் பொறாமைப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சி இருக்கும். மாணவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
பரிகாரம்: ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வணங்க உடல் ஆரோக்கியம் உண்டாகும்.


