இன்றைய ராசி பலன்வார ராசிபலன்தமிழ் மாத ராசிபலன்பிறந்தநாள் பலன்கள்
ஆண்டு பலன்கள் | ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025ஆங்கில புத்தாண்டு பலன்கள் தமிழ் புத்தாண்டு பலன்கள்

மீனம்

Published: 27 Oct 2025

26.10.25 முதல் 1.11.25 வரை

எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். புதிய சொத்து சேர்க்கை உண்டாகும். வழக்குகளில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்யோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். கலைத்துறையினருக்கு பொறுமையுடன் செயல்பட வேண்டும். சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும்.

பரிகாரம்: அம்மனை வழிபட மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

பிறந்தநாள் பலன்கள்