search-icon-img
featured-img

தனுசு

Published :

26.10.25 முதல் 1.11.25 வரை

முடங்கி கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள். உங்களுக்கு பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். தொழில் வியாபாரம் சீராக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுப்பதாக இருந்தாலும் நல்லபடியாக முடியும். பெண்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். கலைத்துறையினருக்கு எதிலும் கூடுதல் சிரத்தையுடன் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு விரும்பியதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்க மன அமைதி உண்டாகும்.