2.11.25 முதல் 8.11.25 வரை
மன உறுதி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேலதி காரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். பெண்களுக்கு காரியங்களில் தடை நீங்கும். கலைத்துறையினருக்கு நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். மாணவர்களுக்கு புதிய நட்புகள் கிடைக்கும்.
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர போட்டிகள் குறையும்.