28.9.25 முதல் 4.10.25 வரை
சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் தவறாக புரிந்து கொள்வர். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம். எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கல் உண்டாகும். பணவரத்து கூடும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். கலைத்துறையினருக்கு திடீர் பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவார்கள்.
பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் அமைதி ஏற்படும்.